பெஙகளூரு,
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வேகம் எடுக்க ஆரம்பித்து உள்ளது. நாள்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 26,811 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,99,784 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 530 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,929 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 40,741 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,62,910 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 4,09,924 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.