தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று மேலும் 3,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று மேலும் 3,604 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெஙகளூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலைபாதிப்பால் நாள்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டு அதிகரித்து வந்தது. இதையடுத்து கொரோனா பரவலின் சங்கிலியை உடைக்க கர்நாடக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் பலனாக தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 3,604 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,34,630 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,743 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 7,699 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,98,822 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,01,042 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை