தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தகுதி நீக்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

காங்கிரசின் 11, ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பை ஓட்டலில் தங்கினர். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் ஆகியோர் திரும்ப பெற்றனர்.

இதன் காரணமாக கடந்த 23ந்தேதி கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. இதனால் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.

கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து பா.ஜனதா உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட ஆலோசனைக்கு பின்பு பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவை முதல்-மந்திரியாக பதவி ஏற்க அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் காலை எடியூரப்பா கவர்னர் வஜூபாய்வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அவரும் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். அதனுடன் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் வஜூபாய்வாலா 31ந்தேதி வரை காலக்கெடு விதித்துள்ளார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மாலை எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கர்நாடகாவில் ஏற்கனவே 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் கர்நாடகாவில் தகுதி நீக்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 224 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையின் பலம் 207ஆக குறைந்துள்ளது.

கர்நாடகாவின் தற்போதைய பேரவை கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடந்தால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் போட்டியிடலாம். 15வது சட்டசபைக்கான பதவி காலம் முடிவடையும் வரை 17 பேரும் தேர்தலில் போட்டியிட முடியாது என கர்நாடக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை