தேசிய செய்திகள்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித பாகுபாடுமின்றியும் எல்ரோரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. சாதாரண மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் என பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது

இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் டுவிட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது:-

'எனக்குக் காய்ச்சலும், இருமலும் லேசாக இருந்தது. இதையடுத்து, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் எனக்குத் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது நான் நலமுடன் இருக்கிறேன். இருப்பினும், மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

உங்கள் வாழ்த்துகள், ஆசிகளுடன் விரைவில் குணமடைந்து திரும்புவேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்