கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு நாளை முதல் பேருந்து சேவை தொடக்கம்

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு நாளை முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

தமிழகத்திற்கான பேருந்து சேவைகள் நாளை (திங்கள்கிழமை) முதல் மீண்டும் தொடங்கும் என்று கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கணிசமான குறைந்து வருவதை கருத்தில் கொண்டு சுமார் 250 பேருந்துகள் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று அம்மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கர்நாடகாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பஸ் போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்