தேசிய செய்திகள்

பத்மாவத் போராட்டம் கர்னி சேனா தேசிய செயலாளரை போலீஸ் கைது செய்தது

பத்மாவத் போராட்டம் தொடர்பாக கர்னி சேனா தேசிய செயலாளரை போலீஸ் கைது செய்து உள்ளது. #Padmaavat #KarniSena

குர்கான்,

பத்மாவத் போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது வன்முறை வெடித்தது. வன்முறை தொடர்பாக ஸ்ரீ கர்னி சேனாவின் தேசிய செயலாளர் சுராஜ் பால் அமுவை குர்கான் போலீஸ் கைது செய்து உள்ளது.

குர்கானில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக நேற்று போலீஸ் அவரை பிடித்தது, தொடர்ந்து விசாரணை நடத்தியதை அடுத்து அவரை போலீஸ் கைது செய்து உள்ளது.

புதன்கிழமை அன்று பத்மாவத் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தேசம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குர்கானில் பொது சொத்துக்கும் கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. அரியானாவில் பள்ளி பேருந்து மற்றும் பஸ்க்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ள அம்மாநில போலீஸ் எப்.ஐ.ஆர்ரில் கர்னி சேனாவின் பெயர் இடம்பெறவில்லை. குர்கானில் சமாதானம் மற்றும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்