Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்..!!

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். தனியார் மின் நிலையத்தில் பணியாற்ற 250க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக பாஸ்கர ராமன் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யபட்டது.

சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்கள் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது.

இதன்பின், சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 4 நாள் சிபிஐ காவல் முடிவடைந்தநிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்