தேசிய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு விசாரணையை கண்காணிக்கிறது.

புதுடெல்லி,

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க. கட்சி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா பயணம்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற 3 பேர் கைது

கடந்த ஜனவரி மாதம் மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு உயர்வு

ரத்தக்கறையால் துப்பு துலங்கியது: நர்சை பலாத்காரம் செய்து கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு