தேசிய செய்திகள்

காஷ்மீர்: கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி; பலர் காயம்

காஷ்மீர் எல்லையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியபாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அஹோனர் செக்டர் பகுதியில் இன்று மதியம் கண்ணி வெடிகள் வைத்திருந்த பகுதிகளை ராணுவ வீரர்கள் செயலிழக்க செய்யும் பணியை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எல்லைப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரை சகவீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்