தேசிய செய்திகள்

காஷ்மீரில் தேடப்பட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிசண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #JammuAndKashmir

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக காஷ்மீரின் முடல்ஹமா பகுதியில், விடுமுறையில் வீட்டில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சலீம் ஷா என்பவரை நேற்று முன்தினம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சலீமின் குண்டுகள் துளைத்த உடல் வயல்வெளியில் இருந்து நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கான்ஸ்டபிளை கொன்ற தீவிரவாதிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் குல்காம் மாவட்டத்தில் குத்வானி பகுதியில் வானி மொஹல்லா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கின்றனர் என்று கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு பணியினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பாதுகாப்பு பணியினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என சந்தேகம் நிலவுவதால் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு