தேசிய செய்திகள்

காஷ்மீர்: வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; பிரதமர் இரங்கல்

காஷ்மீரில் வாகனம் ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 44ல் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், ராம்பன் நகரில் இருந்து நீல் ராம்சு நகரை நோக்கி சிலர் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு வாகனத்தின் மீது இந்த வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

இச்சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது அறிந்து வேதனையடைந்தேன்.

அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டி கொள்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு