தேசிய செய்திகள்

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக, கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பிரயாக்ராஜ்,

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் படையினர் அனைவரும் தீவிர உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

கும்பமேளாவில் புனித நீராட வரும் பக்தர்கள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறிய போலீஸ் அதிகாரிகள், கும்பமேளா நடைபெறும் பிரதான பகுதிகள் அனைத்திலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அதிநவீன தொழில் நுட்ப கருவிகளும் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை