தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிசூடு - ஒருவர் காயம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிசூடு தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் காயமடைந்தார்.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் பகுதியில் எல்லைப்பகுதியில் நேற்று இந்திய ராணுவத்தினர் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய நிலைகளை நோக்கி திடீரென துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.

இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவித காயமோ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 11-ந் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய வீரர் ஒருவர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்