தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டர்; ராணுவ வீரர்கள் 2 பேர் காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா பகுதியில், சில நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் உயரதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

தோடா,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலையில் இருந்து கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இதுபற்றி ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் வெளியிட்ட செய்தியில், தோடா மாவட்டத்தில் கஸ்திகார் பகுதியில் சண்டை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தோடா பகுதியில், சில நாட்களுக்கு முன் உயரதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தோடாவில் இன்று நடந்த என்கவுண்ட்டரில் ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தோடா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பின் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ப்பதற்காக அவர்கள், ராணுவ ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து