தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராவல்போரா என்ற பகுதியில் அவர்கள் கூட்டாக இணைந்து நேற்றிரவு தேடுதல் வேட்டையை நடத்தினர்.

இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்ட்டரில், ஒரு பயங்கரவாதியை போலீசார் சுட்டு கொன்றனர். இதனை காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து கூட்டு நடவடிக்கை நடந்து வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு