தேசிய செய்திகள்

காஷ்மீர்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் நவ்காம் செக்டரில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தானின் ராணுவத்தினருக்கு இணையாகக் கருதப்படும் பேட் எனப்படும் பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழுவினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியோடு பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். ஆனால் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக அதனை கண்டறிந்து பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்