தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீரில் பாதுகாப்புபடை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் லோலப் என்கிற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று காலை மாநில போலீசாரும், பாதுகாப்புபடை வீரர்களும் கூட்டாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புபடை வீரர்களை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதனை தொடர்ந்து போலீசாரும், பாதுகாப்புபடை வீரர்களும் தங்களுடைய துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் பயங்கரவாதிகள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.