தேசிய செய்திகள்

சமூக விரோத சக்திகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் சமூக விரோத சக்திகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

சமூக விரோத சக்திகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கண்டறிய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

திருவிழாக்கள் மற்றும் ஊரக தேர்தல்கள் நெருங்கியுள்ள தருணத்தில் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். நேற்று இரவு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- விழாக்களை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவதில் எந்த இடையூறும் இருக்க கூடாது. திருட்டு, ஈவ் டீசிங், செயின் பறிப்பு, உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு சவலாக உள்ளனர். எனவே, வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களின் அடையாளம், செயல்பாடு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை