புது டெல்லி
டெல்லி சட்டப்பேரவையை சேர்ந்த பாவனா தொகுதியின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தொண்டர்களிடையே பேசிய கெஜ்ரிவால், பாஜகவின் சமீபத்திய வெற்றிகளுக்கு பின்னால் மின்னணு வாக்கு இயந்திரங்களை தவறாக பயன்படுத்திய விவகாரம் உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
அடுத்த கட்சியிலிருந்து பேரவை உறுப்பினர்களை பணம் கொடுத்து இழுப்பது என்று செயல்பாடுகள் டெல்லியில் தோல்வியடைந்துள்ளது என்றும் கெஜ்ரிவால் கூறினார். அப்படி பணத்திற்கு விலைபோனவர்கள் தொகுதியில் முகம் காட்ட முடியாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது என்றார் கெஜ்ரிவால்.
உங்களுக்கு துணிவிருந்தால் இனி வரும் தேர்தல்களில் ஒப்புகை வாக்குச்சீட்டுகளை தேர்தல்களில் பயன்படுத்துங்கள். பின்னர் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கில் 5 அல்லது 15 சதவீத வாக்குகளை சரி பாருங்கள். அப்போது தெரியும், நீங்கள் வாக்கு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி வெற்றி பெறுகிறீர்கள் என்பது தெரிய வரும் என்றார் கெஜ்ரிவால்.
சென்ற முறை ரஜௌரி கார்டன் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் ஒப்புகை வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது பாஜக வெற்றி பெற்றது. இப்போது ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதால் கெஜ்ரிவால் இவ்வாறு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.