தேசிய செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது: அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் 14ம் தேதிக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

டெல்லி, 

டெல்லியில் மதுபான கெள்கை தெடர்புடைய சட்டவிரேத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரம் செய்வதற்காக கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு 21 நாள்கள் ஜாமீன் வழங்கி, கடந்த மே 10ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் தேர்தல், பிரசாரம் முடிவடைந்து கடந்த 2ம் தேதி அன்று கெஜ்ரிவால் திகார் சிறையில் மீண்டும் சரணடைந்தார். இதற்கிடையே, கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி ரூஸ் அவின்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பேது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கத்துறை தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து