தேசிய செய்திகள்

பாகிஸ்தானால் கொடூர முறையில் கொல்லப்பட்ட வீரரின் குடும்பத்துக்கு கெஜ்ரிவால் ரூ.1 கோடி இழப்பீடு

பாகிஸ்தான் படையால் சர்வதேச எல்லையில் கொடூர முறையில் கொல்லப்பட்ட இந்தியரின் குடும்பத்தினருக்கு கெஜ்ரிவால் ரூ.1 கோடி இழப்பீடு தொகை வழங்குகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு அருகே அமைந்த சர்வதேச எல்லை பகுதியில் கடந்த செப்டம்பரில் பாகிஸ்தான் படையினரால் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரரான நரேந்திர சிங் என்பவர் கொடூர முறையில் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், சிங்கின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்காக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்காக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

இதன்படி, வருகிற 21ந்தேதி சோனிபத் நகருக்கு செல்லும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சிங்கின் உறவினர்களிடம் இழப்பீட்டு தொகையை வழங்க உள்ளார்.

கடந்த செப்டம்பர் 21ந்தேதி சிங்கின் சொந்த கிராமத்திற்கு சென்ற கெஜ்ரிவால் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது