தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா பாதிப்பில் குணமடைந்த எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் காலமானார்

கேரளாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொங்காடு தொகுதி எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் காலமானார்.

திரிச்சூர்,

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் கொங்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.வி. விஜயதாஸ் (வயது 61).

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் அவருக்கு தலையில் இரத்த கசிவு ஏற்பட்டு தொடர்ந்து அதற்கும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரது நிலைமை மோசமடைந்து பின்பு தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் திங்கட்கிழமை இரவில் காலமானார்.

அவரது மறைவுக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், விவசாய குடும்பத்தில் இருந்து மக்கள் பணிக்கு வந்த விஜயதாஸ், விவசாயிகளின் நலன்களுக்காக சுயநலமின்றி உழைத்தவர்.

அவர் பாலக்காடு மாவட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றிய தலைவர். அவரது திடீர் மறைவு கம்யூனிஸ்டு இயக்கத்திற்கு பேரிழப்பு என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு