தேசிய செய்திகள்

கேரள நடிகை பாலியல் தொல்லை விவகாரம்: நடிகர் திலீப் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அரசு தரப்பில் மேலும் 41 சாட்சிகளை விசாரிக்க கோரிய விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் திலீப்புக்கு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரபல கேரள நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த மனுவை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது கேரள நடிகையை கடத்தி, துன்புறுத்திய வழக்கில் அரசு தரப்பில் மேலும் 41 சாட்சிகளை விசாரிக்க வேண்டி உள்ளது என கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது விசாரணையை தாமதப்படுத்தும் யுக்தி என நடிகர் திலீப் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கேரள நடிகையை கடத்தி, துன்புறுத்திய வழக்கில் அரசு தரப்பில் மேலும் 41 சாட்சிகளை விசாரிக்க கோரிய விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் திலீப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து