காங்கிரஸ் பட்டியல்
தமிழக சட்டசபை தேர்தலுடன் 140 இடங்களை கொண்டுள்ள கேரள சட்டசபைக்கும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணி வரிந்து கட்டுகிறது. 92 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், 86 வேட்பாளர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
உம்மன்சாண்டி புதுப்பள்ளியில் போட்டி
முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, 1970-ம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலமாக தான் போட்டியிடுகிற புதுப்பள்ளி தொகுதியில் இப்போதும் போட்டியிடுகிறார்.கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஹரிபாத் தொகுதியில் களம் இறங்குகிறார்.தற்போதைய எம்.பி.யும், முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகனுமான கே.முரளீதரன், நேமம் தொகுதியில் நிறுத்தப்படுகிறார் கடந்த சட்டசபை தேர்தலில் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் பா.ஜ.க. வெற்றி பெற்று, அந்த கட்சியின் மூத்த தலைவர் ஓ.ராஜகோபால் ஒற்றை எம்.எல்.ஏ.வாக செயல்பட்டார்.இந்த தொகுதியை இம்முறை கைப்பற்றியே தீருவது என்று காங்கிரஸ் உறுதியோடு முரளீதரனை களம் இறக்குகிறது.