தேசிய செய்திகள்

கேரள சட்டசபையில் பரபரப்பு கையெறி குண்டை காட்டி பேசிய எம்.எல்.ஏ.

கேரள சட்டசபையில் நேற்று உள்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அப்போது, முன்னாள் போலீஸ் துறை மந்திரியான திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசினார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசுகையில், கேரள போலீஸ் துறையின் செயல்பாடு தற்போது கவலை அளிப்பதாக கூறியதுடன், சில குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார். உரிமைக்காக போராட்டம் நடத்துபவர்கள் மீது அத்துமீறி போலீசார் செயல்படுகின்றனர் என அவர் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கையெறி குண்டை எடுத்து சபையில் காண்பித்தார்.

அதைக் கண்டு முதல்மந்திரி பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்தனர். சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், எனது கையில் உள்ள இந்த கையெறி குண்டு, திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் பயன்படுத்தியது ஆகும். இந்த குண்டு காலாவதியாகி விட்டது. காலாவதியான இந்த வகை குண்டுகளை பயன்படுத்தும்போது பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்