தேசிய செய்திகள்

கேரளாவில் சில இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது: பினராயி விஜயன் ஒப்புதல்

கேரளாவில் சில இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கேரளாவில் இன்று ஒருநாளில் மட்டும் 791 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் இதுவரை பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், கேரளாவில் சில இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதாக கூறினார். பினராயி விஜயன் கூறுகையில், திருவனந்தபுரத்தின் பூந்துரா மற்றும் புல்லுவிலா ஆகிய கடற்கரை பகுதிகளில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்