தேசிய செய்திகள்

ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் கைது

கேரளாவில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சியில் உள்ள சிறுவர்கள் விடுதியில் இயக்குநராக பணியாற்றிய பாதிரியார் ஜார்ஜ் டி.ஜே, என்ற ஜெர்ரி, சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 6 மாத காலமாக இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இதுதொடர்பாக சிறுவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்ட போது இத்தகவல் வெளியே தெரியவந்துள்ளது. சிறுவர்கள் விடுதியில் இருந்து விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் விடுதிக்குள் நுழைவதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அப்போது மாணவர்கள் பேசிய போது பாதிரியாரால் நடந்த கொடூரம் வெளியே தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர்களிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிரியார் ஜெர்ரியை கைது செய்துள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு