தேசிய செய்திகள்

நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவிகள் செய்ய கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு

நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவிகள் செய்ய கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டு உள்ளார். #HelpNEETStudents #PinarayiVijayan

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

இந்தியா முழுவதும் 6-ந் தேதி நீட் தேர்வு நடக்கிறது. தமிழக மாணவர்கள் பலருக்கு நீட் தேர்வு எழுத ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு முன்பணமாக ரூ 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் மாணவர்களுக்கு முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, அடையாள அட்டையை காண்பித்து முன்பணம் வாங்கி கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர் என தெரியவந்து உள்ளது. மதுரையிலிருந்து 1,550 பேர், திருச்சியிலிருந்து 1,520 பேர், நெல்லையிலிருந்து 2,301 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்று தேர்வு எழுதுகின்றனர்.

வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவ சமூக ஆர்வலர்கள் பலர் ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். அதுவும் ராஜஸ்தான் மாநிலம் வெகுதொலைவில் இருப்பதால் அங்கு செல்லும் மாணவர்களுக்கு உதவ பலர் முன்வந்து உள்ளனர். கேரள மாநிலம் தமிழகத்துக்கு அருகில் இருந்தாலும் தேர்வு மையங்களை கண்டுபிடிப்பதில் தமிழக மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கேரளாவில் வாழும் தமிழர்கள் பலரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முன்வந்து உள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதவரும் தமிழக் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டு உள்ளார். நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார். தமிழக மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்