தேசிய செய்திகள்

கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதவி விலக முடிவு - சோனியா காந்திக்கு கடிதம்

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. எனவே இதற்கு பொறுப்பேற்று கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதவி விலக முடிவு செய்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. எனவே இதற்கு பொறுப்பேற்று கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதவி விலக முடிவு செய்துள்ளார்.

கட்சி தலைவர் சோனியா காந்திக்கு தேர்தல் தொடர்பாக விரிவான கடிதம் எழுதியுள்ள அவர், அதில் தான் மேலும் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்பதையும் குறிப்பிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை அந்த பதவியில் தொடருமாறு கட்சித்தலைமை அவரை கேட்டுக்கொண்டு உள்ளது. இதை நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாநில காங்கிரஸ் தலைமைக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை மட்டுமே இந்த பதவியில் தொடர்வேன். மாநில காங்கிரஸ் தலைவராக எனக்கு கட்சித்தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்கினர். ஆனால் தேர்தல் தோல்வியால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். எனவே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக யாரையும் குற்றம் சொல்லும் நோக்கம் இல்லை என்று தெரிவித்தார்.

இதன் காரணமாகத்தான் தேர்தலுக்கு பின்பு முதல் முறையாக நேற்று முன்தினம் நடந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்