தேசிய செய்திகள்

கேரளா: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டில் 1 மணிநேரம் வைக்க அனுமதி

கேரளாவில் கொரோனா நோயாளிகள் உடலை எடுத்து சென்று வீட்டில் 1 மணிநேரம் வைக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் 13,550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 104 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 13,093 ஆக உயர்ந்துள்ளது.

10,283 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 27,97,779 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 11% ஆக உள்ளது.

உயிரிழந்த கொரோனா நோயாளிகளுக்கு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்த முடியாத சூழல் உள்ளது. மனஅழுத்தமும் கூடுகிறது.

இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படும். அந்த உடல்களை வீட்டில் 1 மணிநேரம் வைக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளது என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை வீட்டிற்கு எடுத்து செல்லவோ, இறுதி சடங்குகளை உறவினர்கள் செய்யவோ அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்குடன் அந்தந்த அரசு நிர்வாகம் உடல்களின் இறுதி சடங்குகளை நிறைவேற்றி வந்தது. இந்நிலையில், கேரள அரசு இந்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்