தேசிய செய்திகள்

கேரளாவில் ஆக.30-ல் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நிலைகுலந்த கேரளாவில் மறுகட்டமைப்பு பணிகள் செய்வது குறித்து ஆலோசிக்க வரும் ஆக.30-ல் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது

திருவனந்தபுரம்,

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் இயற்கை வளம் மிக்க கேரளா, கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்த கன மழையால் சீர்குலைந்து சின்னாபின்னமாகி இருக்கிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கேரளாவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து பெய்த மழையாலும், அணைகள் திறக்கப்பட்டதாலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 274 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான கால்நடைகளும் பலியாகி இருக்கின்றன. தற்போது மழை குறைந்து இருப்பதால் வெள்ளநீர் வடிய தொடங்கி இருக்கிறது. நிவாரண பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்று கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மழை வெள்ளத்தால் உருக்குலைந்த கேரளாவில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்க மாநில சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் வரும் ஆகஸ்ட் 30 ல்கூடும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மறுகட்டமைப்பு பணிகளை செய்ய ஏதுவாக ஜி.எஸ்.டி வரியில் மாநில அரசு கூடுதலாக 10 சதவீதம் வரி வசூல் செய்யவும் கேபினட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு