தேசிய செய்திகள்

கேரளாவுக்கு 89,540 டன் உணவு தானியம், 100 டன் பருப்பு இலவசமாக வழங்கப்படும்: ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

கேரளாவுக்கு 89,540 டன் உணவு தானியம், 100 டன் பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், 1 லட்சத்து 18 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டது. மத்திய அரசு, 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியங்களும், 100 டன் பருப்புவகைகளும் கேரளாவுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.n

கேரளாவில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கு இப்பொருட்களை வினியோகம் செய்ய கேரள அரசு பயன்படுத்திக்கொள்ளலாம். இவை முதல்கட்ட உதவிதான். தேவைப்பட்டால், இன்னும் உதவ தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது