தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு: கேரள முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்வப்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை

எதன் அடிப்படையில் முதல்-மந்திரி மீது ஸ்வப்னா புகார் கூறினார் என்பது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எர்ணாகுளத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் முன்னாள் மந்திரி ஜலீல் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் ஆகியோர் மீதும் சில குற்றச்சாட்டுகளை கூறினார். இதுதொடர்பாக ரகசிய வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில் எதன் அடிப்படையில் முதல்-மந்திரி மீது ஸ்வப்னா புகார் கூறினார் என்பது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டது. மேலும் அவர் கோர்ட்டில் கொடுத்த ரகசிய வாக்குமூலம் அறிக்கையை அமலாக்கத்துறை பெற்று உள்ளது.

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக ஸ்வப்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் இன்று ஆஜராக உள்ளார். அவரிடம் ஏதேனும் புதிய ஆதாரம் உள்ளதா என்பது குறித்தும் சிவசங்கர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு எழுதிய சுயசரிதை புத்தகத்தில் கூறியுள்ள கருத்துகள் குறித்தும் விளக்கம் கேட்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில் தங்கம் கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஸ்வப்னா கோரிக்கை விடுத்து வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு