தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு; 16 மாதங்களுக்குப் பிறகு ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுதலை

ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார், உபா சட்டத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 16 மாதங்களாக ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

உபா சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பேரின் உறுதி பத்திரம் அளிக்க ஸ்வப்னா சுரேஷுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று (6-ந் தேதி) திருவனந்தபுரம் அட்டா குளங்கரா மகளிர் சிறையில் இருந்து ஸ்வப்னா சுரேஷ் விடுதலை செய்யப்பட்டார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை