திருவனந்தபுரம்:
கேரள சட்டசபையில் இன்று நிதி மந்திரி தாமஸ் ஐசக், 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* திரைத்துறை வளர்ச்சிக் கழகத்திற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது
* உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது
* மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்கு ரூ.788 கோடி, மலபார் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.35 கோடி, கொச்சி புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது
* சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ரூ.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* தேவசம் போர்டுகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* மாற்றுத்திறனாளிகள் பென்சன் திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* சிறப்பு குழந்தைகள் நலனுக்காக ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* மழை வெள்ளத்தால் பேரிழப்பை சந்தித்த கேரள மாநிலத்தை மீட்டெடுத்து, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தங்கம், வெள்ளி, பிளாட்டின நகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் மீதும் 0.25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.
* பீர், ஒயின் உள்ளிட்ட அனைத்து வகை வெளிநாட்டு மதுபானங்களின் முதல் விற்பனை மீது 2 சதவீத வரி விதிக்கப்படும். இதன்மூலம் அரசுக்கு 180 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
* சினிமா டிக்கெட்டுகள் மீது 10 சதவீத பொழுதுபோக்கு வரி விதிக்கப்படும்.
* புதிய மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் தனியார் சேவை வாகனங்களுக்கு ஒரு சதவீதம் (ஒரு முறை) வரி விதிக்கப்பட உள்ளது. என கூறி உள்ளார்.