தேசிய செய்திகள்

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ரெஹனா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ரெஹனா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உத்தரவை தெடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் சபரிமலைக்கு சென்றவர், ரெஹனா பாத்திமா. இவர், முத்த பேராட்டம், மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் பேன்ற பல சர்ச்சையான விஷயங்களில் சிக்கிய நிலையில், சபரிமலைக்கு சென்றதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், அய்யப்ப பக்தர்கள் தெடர்பாக, ரெஹனா பாத்திமா தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, கேரள பேலீசார் ரெஹனா பாத்திமாவை கைது செய்தனர். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ரெஹனா பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ரெஹனா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்