கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்..!

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரி வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

கொச்சி,

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பீட்டர் மயாலிபரம்பில். மூத்த குடிமகனான இவர், கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நான் 2 டோஸ் தடுப்பூசிகளையும் பணம் செலுத்தி போட்டுக்கொண்டேன். எனவே, தடுப்பூசி சான்றிதழ், எனது தனிப்பட்ட சொத்து. அதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை பொறிப்பது, தனிநபரின் தனியுரிமையில் குறுக்கிடும் செயல். ஆகவே, மோடி புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, நீதிபதி என்.நாகரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்