திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகள், பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 7.30 மணிக்கே வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள் ஆகிய்வை மூடப்பட வேண்டும் என்றும் கேரள அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டியூஷன் மற்றும் கோச்சிங் செண்டர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.