தேசிய செய்திகள்

ஆப்கானில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த கேரள இளைஞர் அமெரிக்கா தாக்குதலில் சாவு

ஆப்கானிஸ்தான் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கேரளாவில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த இளைஞர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

காசர்கோடு,

அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்ததாக நம்பப்படும் யாக்யாவின் குடும்பத்தினர் இது தொடர்பாக நேற்று செய்தியை பெற்று உள்ளனர். டெலகிராம் வழியாக அவர்களுக்கு யாக்யா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. சமூக வலைதளம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் கிடைக்கப்பட்டு உள்ளது என ரகிமான் என்பவர் கூறிஉள்ளார். பதில் அனுப்பியது அஸ்பாக் என தெரியவந்து உள்ளது. அஸ்பாக் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் யாக்யா உயிர் தியாகம் செய்தார் என செய்தி அனுப்பி உள்ளார் என தெரியவந்து உள்ளது.

அமெரிக்க படைகளுடன் நடந்த சண்டையில் யாக்யா உயிரிழந்தாக செய்தியில் குறுப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அவர் எப்போது கொல்லப்பட்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

யாக்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியவர், கடந்த ஆண்டு கேரளாவில் இருந்து பெண்கள் உள்பட 21 பேர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைய ஆப்கானிஸ்தான் சென்று உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அவர்களில் யாக்யாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்