தேசிய செய்திகள்

ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி

கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து போரிட்ட 5 வாலிபர்கள் பலியானதாக கேரள மாநிலம் கண்ணூர் போலீசார் அதிகாரபூர்வமாக உறுதி செய்து உள்ளனர்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்தனர்.இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது.

இறந்தவர்கள் ஷநாத் ( வயது 25 ) சலாட்பகுதியை சேர்ந்தவர், ரிஷல்( 30 ) வலாபட்டனம், ஷமீர் (45) அவரது மகன் சல்மான்( 20) பப்பினிசேரி, ஷாஜீர் (25) எச்சூர் ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது. மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை