திருவனந்தபுரம்,
கேரளாவில் ஒரு தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்ட ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பாதிரியார்கள் மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, பெண்களை மிரட்ட வாய்ப்பு இருப்பதால், பாவ மன்னிப்பு கேட்கும் வழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில், அதற்கு கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சூசை பாக்கியம் கூறுகையில், இது, மத நம்பிக்கையில் குறுக்கிடும் செயல். இந்த பரிந்துரை தேவையற்றது. இதை ஏற்கக்கூடாது என்று பிரதமருக்கு மனு அனுப்பி இருக்கிறோம் என்றார்.
அதுபோல், மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தானம், இந்த பரிந்துரையை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.