தேசிய செய்திகள்

கேரளாவுக்கு செல்ல வேண்டாம்: தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், தங்கள் நாட்டு சுற்றுலாப்பயணிகள் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் அமெரிக்க பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள கேரளாவில், கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் உள்ள அணைகள் பெரும்பாலானவை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அனைத்து அணைகளிலும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...