தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா பாதிப்பால் 27 பேர் பலி: இன்று புதிதாக 4,969 பேருக்கு தொற்று உறுதி

கேரளாவில் இன்று புதிதாக 4,969 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 ஆயிரத்து 969 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 8.17 சதவிகிதமாக உள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 27 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,734 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 58 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 4,970 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 27 ஆயிரத்து 364 பேர் குணம் அடைந்துள்ளனர்

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு