திருவனந்தபுரம்,
கேரளா மாநிலத்தில் இன்று புதிதாக 6,004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,25,770 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 26 பேர் உயிரிழந்தநிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,373 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5158 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,56,817 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 65,373 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேர்தில் 69,081 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 8.69 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 86,20,873 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.