கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 7,555 பேருக்கு தொற்று

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,45,115 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இதுவரை மொத்தம் 26,865 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 87,593 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து இன்று 10,773 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47.39 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 73,157 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 10.32 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93.8 சதவிகிதம் (2,50,78,552) பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 45.5 சதவிகிதம் (1,21,69,186 ) பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது