கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 8,733 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 118 பேர் பலி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48,79,317 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 9,855 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,79,228 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 81,496 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,202 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 86,303 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் அதிகபட்சமாக ஏர்ணாகுளம் மாவட்டத்தில் 1,434 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு