தேசிய செய்திகள்

ஐந்து மாதங்களுக்குப் பின் நாளை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.நாளை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருக்கும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.

இன்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின் நாளை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.

கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடாந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தாகள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பையொட்டி ஜூலை 16-ஆம் தேதி மாலை சந்நிதானம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 17 முதல் 21-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கோவிலுக்கு வர பக்தாகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி 5,000 பக்தாகள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா. அவாகள் முன்கூட்டியே இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தாகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோவிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆாடிபிசிஆா கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்று சபரிமலை ஐயப்பன் கோயிலை நிவகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது