புதுடெல்லி,
கேரளாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றிய கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மாணி, மேற்கு வங்காளத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்பிதா கோஷ் ஆகியோர் இந்த ஆண்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதனால் காலியாக உள்ள அந்த 2 இடங்களுக்கும் வருகிற 29-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல், 9-ந் தேதி தொடங்குகிறது.