தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த கேரள வாலிபர் சாவு

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த கேரள வாலிபர் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.

2017-ம் ஆண்டு கேரளாவிலிருந்து 20-க்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தனர். இவர்களில் ஒருவர் முகமது முகாஷின் என்ற கல்லூரி மாணவர். திருச்சூரில் உள்ள கல்லூரியில் என்ஜினியரிங் படித்த இளைஞர் வீட்டைவிட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸ், மத்திய உளவுப்பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் முகமது முகாஷின் உயிரிழந்தான் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 10 நாட்களுக்கு முன்னதாக வாலிபரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு