கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல் மந்திரி சித்தராமையா, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கண்டறிவது மற்றும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது ஆகியவற்றில் தனது முயற்சியில் அரசு நேர்மையுடன் செயல்படுகிறது என கூறினார்.
கடந்த செப்டம்பர் 5ந்தேதி தனது வீட்டில் இருந்த லங்கேஷை அடையாளம் தெரியாத நபர்கள் மிக நெருங்கிய தொலைவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.